
விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் உடன் சேர்ந்து சந்திரலேகா படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். இதனையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை பிரிந்தார் வனிதா. பின்னர் மகளை இவர் வைத்துக்கொண்டு மகன் தந்தையோடு வசித்து வருகிறார்.
அதன் பிறகு ஆனந்தராஜ் என்ற தொழில் அதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை .இதற்கிடையில் சினிமாவில் இருந்து விலகி இருந்த வனிதா பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தார். இந்த நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திலிருந்து சுபமுகூர்த்தம் என்ற பாடல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 5.55 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அந்த போஸ்டரில் வனிதா மணக்கோலத்தில் இருக்கிறார்.
View this post on Instagram