கர்நாடக மாநிலத்தில் உள்ள பரசுராம்புரா பகுதியில் பிரபாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் சம்பவ நாளில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் லிப்ட் கொடுப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றார். இந்நிலையில் பிரபாகரனை தற்போது நரபலி கொடுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆனந்த ரெட்டி என்பவருக்கு ஜோதிடரான ராமகிருஷ்ணா என்பவர் ஒரு ஆணை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி தான் பிரபாகரனை அவர் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று நரபலி கொடுத்துள்ளார். தற்போது தலைமுறைவாக உள்ள அவர்கள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.