சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால் புதிய சிலிண்டரை லட்சுமி மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது. அந்த சமயத்தில் பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் லட்சுமி மற்றும் வீரசேகரன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பக்கத்து அறையில் இருந்து அவர்களுடைய மருமகன் குணசேகரன் அவர்களை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். அப்போது அவரும் தீ விபத்தில் சிக்கிய நிலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மூவரும் இறந்து விட்டனர். இதில் லட்சுமி தம்பதியினரின் மகள் ஆனந்தியின் கணவர் தான் குணசேகரன்.தன்னுடைய மனைவி தினசரி வேலைக்கு சென்று விட்டு அம்மா வீட்டுக்கு வரும் நிலையில் அங்கிருந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதை குணசேகரன் வழக்கமாக வைத்திருந்த நிலையில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு வழக்கம்போல் மனைவியை அழைக்க வந்துள்ளார். ஆனால் அவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.