
தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் “சக்ரவாகம்” இந்த சீரியலில் நடித்த நடிகர் இந்திரானிற்கு மாமியாராக நடித்துள்ளவர் மேகனா. இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி உள்ளது. இந்த சீரியல் தெலுங்கு டி.ஆர்.பி யில் எப்பொழுதுமே இடம் பிடித்து விடும். இந்த சீரியல் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள். இந்த சீரியலில் நடித்த மாமியார் மருமகன் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் கணவன், மனைவியாக மாறியுள்ளார்கள்.
இவர்கள் தற்போது தங்களது 20ஆவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்த போது நிறைய கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளனராம். மாமியாரை திருமணம் செய்த மருமகன் என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல், கேலி செய்ததாக கூறியுள்ளனர்.
சீரியல் படப்பிடிப்பு தளத்தில் காதலித்து வந்த இந்த ஜோடி பெற்றோர்களை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்துள்ளனர். நிஜ வாழ்க்கையிலும் இந்திரனில்லை விட வயது பெரியவர் தான் மேகனா. இருவருக்குமே 40 வயது கடந்துள்ளதால் தங்களுக்கு வயதாகி விட்டது என்ற காரணத்தினால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என கூறுகின்றனர்.தற்போது இவர்கள் காதல்கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.