தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்.இவர் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறார். அப்போது அவர் மீது முட்டை வீச சில சமூக விரோதிகள் திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பான ஆடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் ஆதரவாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் மீது முட்டை வீசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுபவர்கள் ரஜினி ரசிகர்கள் என்று கூறுகிறார்கள். அதாவது நடிகர் விஜய் மார்ச் இரண்டாம் தேதியில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அப்போது மளிகை கடையில் முட்டைகளை வாங்க வேண்டும் எனவும் அதன் விலை மற்றும் எப்படி முட்டைகளை வீச வேண்டும் போன்றவைகளை அவர்கள் பேசுகிறார்கள். மேலும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.