
கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400 ஆகும். 10 சீரியல் எண்களில் 50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இதில் 45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா நிதித்துறை மந்திரி பாலகோபால் தலைமையில் பம்பர் லாட்டரி குலுக்கள் நடைபெற்றது.
இந்த பம்பர் லாட்டரி குலுக்களில் முதல் பரிசு ரூபாய் 20 கோடி ஆகும். இதனை கண்ணூர் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீட்டு XD 387132 என்ற லாட்டரி எண்ணுக்கு ரூபாய் 20 கோடி பரிசு தொகை விழுந்துள்ளது. கண்ணூரில் உள்ள முத்து லாட்டரி விற்பனை நிலையத்தில் சீட்டு இரிட்டி என்ற இடத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகையை வாங்கிய சத்யன் என்பவர் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள இரிட்டியில் உள்ள தனியார் வங்கியில் லாட்டரி டெபாசிட் செய்து உள்ளார். மேலும் வங்கி அதிகாரிகளிடம் தன்னுடைய விபரங்களை வெளியிட கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளதால், வங்கி அதிகாரிகள் பரிசுத்தொகை விழுந்த நபரை பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.