உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக பௌர்ணமி போன்ற தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி போன்ற தினங்களில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்நிலையில் வருகிற 11ஆம் தேதி தை மாத பௌர்ணமி வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் தற்போது கோவில் நிர்வாகம் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை இரவு 7.59 மணி முதல் மறுநாள் பிப்ரவரி 12ஆம் தேதி புதன்கிழமை இரவு 8.16 மணி வரை நல்ல நேரம். மேலும் பிப்ரவரி 11ஆம் தேதி இரவு கிரிவலம் செல்ல நல்ல நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
