தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு. இவருடைய மகன்தான் நடிகர் அருள்நிதி. இதில் தமிழரசுக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடம் சிகிச்சை முறையையும் கேட்டறிந்தார்.

கலைஞர் கருணாநிதியின் மகனான தமிழரசு அரசியலில் இல்லை என்றாலும் கடந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். மேலும் இவர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல் நல பாதிப்பு மற்றும் சிகிச்சை விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.