திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.