2025 ஆம் வருடத்தின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர வீரரான அல்காரஸை எதிர்த்து மோதுகிறார். இதில் ஜோகோவிச் அல்காரஸை எதிர்கொள்வது எட்டாவது முறையாகும்.

அல்காரஸ் தனது இளம் வயதிலிருந்தே பல போட்டிகளில் பங்கேற்று பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்? விம்பிள்டன் ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அல்காரஸ் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் மட்டும் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாததால் இம்முறை அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.