
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குள்ளகாளிபாளையம் கயிலைநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி மனோகரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌரி மனோகரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஒரு வாரம் கழித்து தாயும், சேயும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி ஏற்பட்டதால் கௌரி மனோகரியை அவரது குடும்பத்தினர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கௌரி மனோகரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் கேள்வி கேட்டபோது, டாக்டர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.