இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு ஒரு சில அடி தூரம் அவர் தள்ளி வந்த நிலையில் நடுவர் இன்னும் பேட்ஸ்மேன்‌ கவாஜா தயார் நிலையில் இல்லை என்று கூற, என்னப்பா இது என்று கூறுவது போல் இரு கைகளையும் விரித்து காட்டினார். அப்போது அங்கிருந்த கான்ஸ்டாஸ் பும்ராவை ஏதோ சொல்லி சீண்டினார்.

இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு பேச உடனடியாக நடுவர் தலையிட்டு அவர்களை அமைதி படுத்தினார். அதற்குள் கடைசி ஓவரை பும்ரா வீசி விக்கெட்டை எடுத்த நிலையில் கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒட்டுமொத்த இந்திய அணியும் வெறித்தனமாக கொண்டாடினர். இதற்கு தற்போது ஆஸ்திரேலியா பயிற்சியாளர் மெக்டொனால்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்ற விதத்தில் தான் என்னுடைய பேச்சுவார்த்தை கான்சாஸிடம் இருந்தது. ஆனால் இந்திய அணியினர் அவரிடம் நடந்து கொண்ட விதம் சற்று மிரட்டல் ஆகவே இருந்தது.

ஆஸ்திரேலிய வீரரை மிரட்டும் வகையில் இந்திய அணியினர் நடந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஐசிசி தண்டனை வழங்க வேண்டும். இந்திய வீரர்கள் அவரிடம் நடந்து கொண்ட விதம் விதிமுறைகளுக்கு உட்பட்டது போல் இருப்பதால் அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தை நான் நடுவர் மற்றும் ஐசிசியிடம் விடுகிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் கருதினால் அது நாங்களும் அப்படி விளையாடுவதற்கான அளவுகோல் என்று கருதுகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா எதிரணியினர் அமைதியாக இருக்கும் வரையில்தான் எங்கள் அணியும் அமைதியாக இருப்போம். தேவையில்லாமல் சீண்டி பார்த்தால் சும்மா விடமாட்டோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.