குஜராத் மாநிலம் துவாரகா பகுதியை சேர்ந்தவர்கள் தன்ராஜ் – தீபா தம்பதி. அப்பகுதி காவல்துறையினருக்கு இவர்கள் தொடர்பான புகார் ஒன்று சென்றதைத் தொடர்ந்து போலீசார் தன்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு தீபாவை தேடிய போது கிடைக்காததால் வீட்டை சல்லடை போட்டு தீவிரமாக தேடியுள்ளனர்.

அப்போது படுக்கையறையில் இருந்த மெத்தையின் உள்ளே அழுகிய நிலையில் தீபாவின் சடலம் இருந்துள்ளது. தன்ராஜும் தலைமுறைவாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தீபாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள தலை மறைவான தன்ராஜை தேடி வருகின்றனர்.