மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நிதேஷ் ராணா. இவர் கேரளாவை ஒரு மினி பாகிஸ்தான் என்று கூறியுள்ளார். அதாவது கேரளாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் இந்துக்கள் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். அதனால்தான் கேரளாவில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் அனைத்து பயங்கரவாதிகளும் அவருக்கு வாக்களித்துள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்‌ கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.