குஜராத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டியை சைலேஷ் ரத்தோர்ட் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு 35 வயது ஆகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சைலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 18 மாதங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில் வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த சைலேஷ் அந்த மூதாட்டியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சைலேசை தேடி வருகின்றனர்.