பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டிலிருந்து பதிண்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் மீட்டுப் பணியில் இறங்கினர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
