உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கேப்டன் கஞ்ச் பகுதியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்றுள்ளான். இந்த சிறுவன் கடந்த 20ஆம் தேதி அந்த கிராமத்தில் நடந்த ஒரு வாலிபரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளான். அப்போது அந்த சிறுவனை சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். அது ஒரு சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்தி துன்புறுத்தியதோடு அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.
அந்த சிறுவன் தன் மாமா மற்றும் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூற அவர்கள் இளைஞரிடம் சென்று வீடியோவை டெலிட் செய்யுமாறு கூற அவர்கள் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அந்த புகாரை வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் அந்த சிறுவன் ஏற்று அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக புகார் அதனை ஏற்காத கேப்டன் கஞ்ச் போலீஸ் அதிகாரியை மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
