குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் அவர்களின் மூக்கும் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து மர்ம நபர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். அம்பேத்கர் தொடர்பான பிரச்சனை கடந்து சில தினங்களாக நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://x.com/vibesofindia_/status/1871125083001078036