வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. மக்களுக்காக போராடிய ஆனாலும் மக்களுக்கே தெரியாத தலைவர்கள் பற்றி இந்த படம் கூறியுள்ளது. விடுதலை 2 திரைப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சேத்தன், இளவரசு, மூணார் ரமேஷ், பாலாஜி சக்திவேல், மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் விடுதலை 2 படம் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, தமிழ் திரை உலகின் முக்கியமான படைப்பு தேவையான கால சூழலில் விடுதலை 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்தியாவில் வலதுசாரி அரசியல் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில் இடதுசாரி அரசியலின் தேவையை இளைஞர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில் உள்ள மகத்தான படைப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் விடுதலை 2 திரைப்படத்தில் கோட்பாடு இல்லாத தலைவர்கள் ரசிகர்களை தான் உருவாக்குவார்கள் என்ற வசனம் யாரையும் மனதில் வைத்து எழுதப்படவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.