பிரபல நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து தனுசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைகள் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா சுமத்திய நிலையில் அதற்கு பாடகி சுசித்ரா வரவேற்பு கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது சுசித்ரா நயன்தாராவை கடுமையாக விளாசியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, தனுஷ் தொடர்பாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை நான் பாராட்டினேன். தனுஷ் மீது உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் தன் அறிக்கையில் நயன்தாரா கூறினார். மற்றபடி தனுஷ் மற்றும் நயன்தாரா வழக்கு பற்றி பேச வேண்டும் என்றால் இரு பணக்காரர்கள் மோதி கொள்கிறார்கள். இருவருக்குமே 10 கோடி என்பது ஒரு டிப்ஸ் கொடுப்பது போன்றது தான். அவங்க வீட்டில் பணம் கொட்டி கிடப்பதால் இரண்டு பேருக்குமே அகங்காரம் இருக்கிறது. அதே சமயத்தில் நயன்தாராவுக்கு அண்மையில் அளித்த பேட்டியின் போது தான் அவருடைய அகங்காரம் வெளிப்பட்டது.
எப்போதுமே தமிழ் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது நயன்தாரா பவ்யமாக பேசுவார். ஆனால் அந்த youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியின் போது நான் நடித்த தமிழ் படங்களை விட என்னுடைய டாகுமெண்டரியைதான் ரசிகர்கள் அதிக அளவில் பார்த்துள்ளனர் என்று நயன்தாரா கூறினார். இதுவே அவருக்கு எவ்வளவு அகங்காரம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த பேட்டி மூலமாக ஒரே கல்லில் அவர் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். தனக்கும் தனுஷுக்கும் இடையே உள்ள மோதல் பற்றி கூறிய அவர் ஜவான் படத்திற்கு பிறகு தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வரும் என்று நினைத்த நிலையில் வாய்ப்புகள் வராததால் வெளிப்படையாகவே அதை கூறிவிட்டார். தன்னை விமர்சிக்கும் youtubeபர்களை அவர் குரங்குகள் என்று கூறுகிறார். மேலும் உண்மையில் நயன்தாரா தான் ஒரு சொகுசு பூனை என்று கூறியுள்ளார்.
