அரசியல் சட்டத்தின் 75ஆம் விழா கொண்டாட்டத்தின் போது அச்சட்டத்தை உருவாக்கி தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சர் இழிவுபடுத்தி பேசுவது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்து காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கி தந்த அண்ணலுக்கு அவதூறு. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.