தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தானவாய்குடத்தில் இருக்கும் அரசு விடுதியில் லட்சுமி பவானி கீர்த்தி என்ற மாணவி தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 8 மாதங்களில் 15 முறை லட்சுமி பவானியை எலி கடித்ததாக தெரிகிறது. ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் மாணவிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமி பவானிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவியின் வலது கை மற்றும் கால் செயலிழந்தது. தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நரம்பியல் பிரச்சனையால் மாணவி அவதிப்படுகிறார். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பி.ஆர்.எஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.