கேரளா மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பெரியார் நூற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக முதலமைச்சர், வைக்கம் நகரில் உள்ள பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் குறிப்பிட ரூபாய் 8 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி புனரமைப்பு பணிகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். இந்நிலையில் இது தொடர்பான காணொளி தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் காட்டப்பட்டுள்ள இந்தியா மேப்பில் ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதி இடம்பெறாதது சர்ச்சையை   ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, திமுகவின் அதிகாரப்பூர்வமற்ற ஊடகமான TN DIPR  நமது நாட்டின் வரைபடத்தை சிதைத்து வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் குடியரசு தினம் எப்போது என்று தெரியாத ஒருவரிடம், இந்த மாநிலம் வழிநடத்தப்பட்டால் இத்தகைய மெத்தனப் போக்கில் செயல்படுவதில் தான் முடிவடையும். இது தேசிய ஒருமைப்பாட்டை புறக்கணிக்கின்றது. இதனால் திமுக அரசியல் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்று மீண்டும் செய்யத் துணிய கூடாது என்று பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் பதிவிட்டிருந்தார்.