பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் சிங்கம் போல கர்ஜித்த விஜய் தனது அரசியல் கொள்கைகள், அரசியல் எதிரிகள், கோட்பாடுகள், அரசியல் முன்னோடிகள் என எல்லாவற்றையும் பற்றியும் விரிவாக பேசினார். முதல் மாநாட்டிற்கு பிறகு அரசியல் களம் சூடு பிடித்தது.
அப்போதிலிருந்து பலரும் விஜய்க்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார். அப்போதும் அவர் பேசியது தமிழக வெற்றி கழக தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது. நேரடியாக திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்து விஜய் பேசினார். அந்த கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயின் தந்தையின் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் நிச்சயம் வெல்வார் என கூறியுள்ளார். விஜயின் அரசியல் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து பேசுவதற்கு சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
