
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு துணி மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேரம்பாளையம், ஜடையம்பாளையம், ஆலங்கொம்பு, சிறுமுகை, மேட்டுப்பாளையம், சொக்கம்பாளையம், காக்காபாளையம், கஞ்சப்பள்ளி, படுவம்பள்ளி மற்றும் அன்னூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
அதன் பிறகு திருச்சி மாவட்டத்தில் இம்மணம், சீதாப்பட்டி, கருங்குளம், புறத்துக்குடி, கீரனூர், ராம ரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். அதன் பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கனகாம்பாக்கம், கிருஷ்ணாபுரம் பகுதி, மஹிந்திரா நகரம், பெரிய காவணம், எலியம்பேடு, வைரவன் குப்பம், வெள்ளோடை, பொன்னேரி மற்றும் டவுன் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். அதன் பிறகு கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் டவுன், தெற்கு ரயில்வே, ஊமங்களா, கொயிராமங்கலம், கருவேப்பிலனாகுறிச்சி, கருமாங்குடி, விருத்தாச்சலம் ஆலடி, லிங்க் ராடு, விளாமங்கலம், எருளங் குப்பம், பணிகங்குப்பம், வீரணம், திருவதிகை, தட்டாஞ்சாவடி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடலூர், அரியலூர், டால்மியா, இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, அல்லிநகரம் மற்றும் கூட்டுறவு பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் வேப்பங்குளம், சின்ன பள்ளிகுப்பம், குருராஜபாளையம், பூஞ்சோலை, அக்ரகாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, குண்டு கோட்டை, அந்தேண பள்ளி, கக்கன் புறம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் ரத்து செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் விண்ணமங்கலம், நாச்சார் குப்பம், பெரியங்குப்பம், கண்ணாடி குப்பம், கரும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், புதுக்கோட்டை மலையூர் பகுதி முழுவதும் மின்விநியோகம் ரத்து செய்யப்படும்.
பெரம்பலூரில் புதுக்குடிசை, நல்லறிக்கை, மேல் மாத்தூர், வெண்மணி ஆகிய பகுதிகளிலும், சிவகங்கையில் ராஜ கம்பீரம், சிப்காட், டி புதுக்கோட்டை, மானாமதுரை ஆகிய பகுதிகளிலும், அரியலூர் மாவட்டத்தில் தொழில்துறை, கொக்குடி, நீர்நிலைகள், பொய்யூர், கீழ பலூர் ஆகிய பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் காலியமங்கலம், பூண்டி, பெரியகுளம், தாமரைக் குளம், சோத்துப்பாறை, முருகமலை, வடுகப்பட்டி, புதுப்பட்டி மற்றும் காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உரல், தென் பசார், எண்டியூர், சாரம், உப்பு வேலூர், கிளியனூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அருணகிரி மங்கலம், திம்மூர், சில்லக்குடி, குளத்தூர், கூடலூர் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் தடை செய்யப்படும். மேலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்