தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதல் மாநாடு நடைபெற்ற போது மாநாட்டுக்கு வந்தவர்களில் கிட்டத்தட்ட 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் வரவழைத்தார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கிய விஜய் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களுடன் பேசும்போது மிகவும் கண் கலங்கினார். அதாவது மகிழ்ச்சியாக சந்திக்க வேண்டிய உங்களை இப்படி ஒரு சூழலில் சந்திக்க வேண்டியதாகிற்று. உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடமும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு விஜய் கூறியுள்ளார்.