நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் பலரும் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது பற்றி சீமான் இடம் கேட்கும் போது அவர்கள் விலகி செல்வதை பற்றி எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் சீமான் மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அந்த வகையில் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை பொழிந்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியதாவது, சீமானுக்கு என்ன ஒரு திமிரு. பொம்பள பிரச்சனை இருக்கட்டும் முதலில் உங்க பிரச்சனையை பாருங்க. நாம் தமிழர் கட்சியால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிந்து விட்டது. ஈழத்தில் சீரழிந்த இளைஞர்களைவிட நாம் தமிழர் கட்சியால் சீரழிந்த இளைஞர்கள் அதிகம். நாம் தமிழர் கட்சியிலிருந்து சேரும் இளைஞர்களை முதலில் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி பின்னர் அவர்களை பொருளாதாரத்தில் இருந்து அப்புறப்படுத்தி கடைசியில் அவர்களை வாழ்க்கையில் இருந்தே அப்புறப்படுத்தி கடைசியில் திருவோடு எந்த வைத்துள்ளார்.

13 வருஷமா என் கட்சி என் கட்சி என்று கூறி வாயால் வடை சுடுகிறார். ஒரு மாவட்ட செயலாளரை கேட்காமல் கீழே இருக்கும் இளைஞர்களை அழைத்து கூட்டம் போடுகிறான். அவனுக்கு என்ன ஒரு திமிரு. எல்லாம் சின்ன பயலுக நம்மள என்ன பண்ணிடுவாங்க அப்படிங்கிற திமிரு. ஒரு சின்னத்தை கூட அவரால் பாதுகாக்க முடியவில்லை. கடந்த 2021ல் தேர்தல் ரிசல்ட் வரும் போது சின்னம் நமக்கு போராடினால் தான் கிடைக்கும் என்று தெரியும். 6.57% தான் நாம் தமிழர் வாக்கு வாங்கி இருந்தது. ஆனா அது அசால்டா விட்டுட்டு கண்டுக்காம கடைசில பிஜேபி சின்னத்தை புடுங்கி கிட்டுனு சொல்றாரு. அவர் 30 லட்சம் இளைஞர்களை ஏமாற்ற பார்க்கிறார். பிஜேபி மற்றும் திராவிட கட்சிகளின் மீது சீமான் பழி போட்டு தப்பிக்க நினைக்கும் நிலையில் கட்சியிலிருந்து ஒருவரை கூட எம்எல்ஏ ஆக்க கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

ஏனெனில் ஒருவரை எம்எல்ஏ ஆக்கிவிட்டால் அவர்கள் கட்சியிலிருந்து விலகிவிடுவார்கள் என்பதால் யாரையுமே எம்எல்ஏ ஆக்க கூடாது என்பதில் அவர் முனைப்புடன் இருக்கிறார். கவுன்சிலர்களை வைத்து அடித்து விரட்டுவதோடு ஒரு 4 மாநில ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் முன்னாடி வைத்துக் கொண்டுள்ளார். அவர்களை வைத்து வேலை வாங்க வேண்டியதுதானே. என் கட்சி என் கட்சி என்று சொல்றல்ல நீ ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஜெயிச்சு காட்டு. நான் இந்தியாவை விட்டே போயிடுவேன் என்று கூறியுள்ளார்.

பலர் வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டு விட்டு விலகி விடுகிறார்கள். ஆனால் நான் சீரழிந்த மாதிரி என்னுடைய குடும்பம் சீரழிந்த மாதிரி இனி வேறு யாரும் சீரழியக் கூடாது என்பதால் தான் தற்போது பேசுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் இப்படி சீமானை வெளுத்து வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.