அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவர் மாணவனுடன் உடலுறவு வைத்த நிலையில் அந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுடன் ஆசிரியை உடலுறவு வைத்துள்ளார். இந்த குற்றத்தை ஆசிரியை ஒப்பு கொண்டதால் நீதிமன்றம் அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

அந்த ஆசிரியை தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் அடுத்த 12 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், அடுத்த 5 வருடங்களுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து 25 ஆண்டுகள் பாலியல் குற்றவாளி பட்டியலில் வைக்கப்படுவார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரே மாணவனை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது.