
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என ஏராளமானார் வந்து சேர்களை பிடித்து உட்கார்ந்திருந்தனர்.
இந்த நிலையில் பேச்சை முடித்து மைக்கை ஆப் செய்வதற்குள் மக்கள் தங்கள் அமர்ந்திருந்த சேரை எடுத்து தலையில் கவிழ்த்து போட்டு வீட்டை நோக்கி சென்றனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஐடியா கொடுத்தது யாருப்பா? என கிண்டல் அடித்து வருகின்றனர்.