யுரேசிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா தனது வடக்கு பகுதியில் எல்லையான ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான நாடாகும். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஜார்ஜியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரஷ்ய நாட்டுடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஜார்ஜியன் ட்ரிம் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜார்ஜாவில் தேர்தல் ஆணையத்தின் முன் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதாவது தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியினரும் இதுகுறித்து பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட அனைவரும் தேர்தல் ஆணையத்தில் கூடியிருந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவரான டாவிட் கூட்டத்தில் உள்ள அனைவர் முன்னிலையிலும் தேர்தல் ஆணையர் ஜியோர்ஜி முகத்தில் திடீரென கருப்புமையை ஊற்றினார். இதனால் அங்கு சற்று நேரத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அங்குள்ளவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.