
தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 10 மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.