தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சாலையில் ஒரு நபர் கையில் வாங்கிடாக்கியதில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் ஆட்டோவில் வந்தார். இந்த நாளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் தன்னை சிபிசிஐடி போலீஸ் என்று கூறி சோதனை செய்துள்ளார். ஆட்டோவில் ஆவணங்கள் சரியாக உள்ளதா என கேட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததால் ஆட்டோவில் வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அல்லிநகரத்தை சேர்ந்த வீனஸ் கண்ணன் என்பது தெரியவந்தது. அவர் போலீஸ் இல்லை. குடிபோதையில் வாகன சோதனை ஈடுபட்டாரா? அவரிடம் வாக்கிடாக்கி எப்படி வந்தது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.