நாடு முழுவதும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் போலீஸ் உடைய அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என ஒரு வாலிபர் நினைத்தார். அவர் தவறுதலாக மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட கேரளா சைபர் செல் அலுவலகத்திற்கு வீடியோ கால் போட்டுள்ளார். அந்த வீடியோ கால் திருச்சூர் கேரளா சைபர் செல் அதிகாரிக்கு வந்தது. அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டென்ட் செய்துள்ளார். மற்றொரு பக்கம் போலீஸ் உடைய இணைந்த மோசடிக்காரர் வழக்கம் போல பேசி உள்ளார். உண்மையான போலீஸ் அதிகாரி தனது கேமரா வேலை செய்யவில்லை என கூறியுள்ளார்.
ஆனாலும் மோசடிக்காரர் தொடர்ந்து கேமராவை ஆன் செய்யுமாறு கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார். அப்போதுதான் மோசடிக்காரருக்கு தான் உண்மையான சைபர் க்ரைம் போலீசுக்கு வீடியோ கால் செய்தது தெரியவந்தது. போலீஸ் அதிகாரி அந்த நபரை மோசடி வேலையை இதோடு நிறுத்திக் கொள்வது உங்களுக்கு நல்லது. நீங்கள் இருக்கும் இடம் முகவரி அனைத்தும் தெரியும் என எச்சரித்துள்ளார். அந்த வீடியோ ரெக்கார்டிங் திருச்சூர் சைபர் போலீசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
