
பொதுவாக வாழைப்பழம் என்றால் பலருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வாழைப்பழத்தை விரும்புவார்கள். ஆனால் தற்போது வாழைப்பழத்தை பார்த்தாலே ஒருவர் பயம் என்று கூறுகிறார். அதாவது வாழைப்பழத்தை பிடிக்காது என்று சொன்னால் கூட பரவாயில்லை. ஆனால் அவரோ வாழைப்பழத்தை பார்த்தாலே தனக்கு பயமாக இருக்கிறது என்கிறார்.
அதாவது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பவுலினா பிராண்ட் பெர்க். இவருக்கு வாழைப்பழத்தை பார்த்தாலே பயமாம். அதாவது வாழைப்பழத்தை அருகில் கொண்டு வந்தால் குமட்டல் வந்து விடுமாம். இதனை பார்த்தாலே பதட்டமாகிவிடுவார். இது Banana phofia என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதன் காரணமாக அந்த அமைச்சர் செல்லும் இடமெல்லாம் வாழைப்பழம் இல்லாமல் அதன் வாசனை வராமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள்.