வெளிநாட்டில் பணிபுரியும் மணமகனுக்கும், பிலாஸ்பூரில் வசிக்கும் மணமகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகளின் தாத்தா நோய்வாய் பட்டு இருந்ததால் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் துருக்கியில் பணி புரியும் மணமகனுக்கு தக்க சமயத்தில் விடுமுறை கிடைக்காததால் இரு விட்டாரும் வீடியோ கால் மூலம் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி துருக்கியில் இருந்து மணமகனும், பிலாஸ்பூரில் இருந்து மணமகளும் வீடியோ கால் மூலம் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டியில் “நிக்கா” செய்து கொண்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதேபோன்று சென்ற 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கல்யாணத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிம்லாவில் உள்ள கோட் கரையில் உள்ள மணமகன் ஆஷிஷ்ஷிங்கும், குலுவில் உள்ள பூந்தரை சேர்ந்த மணமகள் ஷிவானி தாக்குருக்கும் திருமணம்  நடைபெற்றது. தற்போது வீடியோ கால் மூலம் அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருவது ட்ரண்ட் ஆகி வருகிறது.