
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 3-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அக்டோபர் 31 முதல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நவம்பர் 1ஆம் தேதி கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.