
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்தது. தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சி வசமாக விஜய் பேசினார். விஜய் தவெக கொள்கைகள் பற்றி பேசியுள்ளார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை. He is ideology confused. இவர் தேசியவாதியா? பிரிவினைவாதியா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என விமர்சித்துள்ளார்.