
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழி நெடுகிலும் தவெகவினர் போஸ்டர்களும் பேனர்களும் அடித்து ஒட்டி உள்ளனர். குறிப்பாக விக்கிரவாண்டியை சுற்றிலும் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் விக்கிரவாண்டியில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திமுக அரசை விமர்சித்து அவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் விடியா திமுக அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி வாருங்கள் என்று நடிகர் விஜயை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதோடு தளபதியால் மக்களாட்சிக்கு விடிவு, நீங்கள் மட்டுமே நடமாடும் முதல்வர் என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுகவினர் மத்தியில் சற்று கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.