தமிழகத்தில் நாளை நடைபெறக்கூடிய விஜயின் முதல் தமிழக வெற்றிக்கழக மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டினை திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட விஜய் முதல் மாநாட்டினை நாளை விக்கிரவாண்டில் உள்ள வி சாலை என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்துகிறார். இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டுகளும் பேனர்களும் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதன் பிறகு வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் வாகனங்களை பார்க்கிங் செய்யும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது வந்து அந்த இடத்தில் மின்விளக்குகளும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் என்ற திட்டத்தை போலீசார் செயல்படுத்த உள்ளனர். இதன் மூலம் பிற வாகனங்கள் வேறு வழியில் மாற்றி விடப்பட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு வரும் வாகனங்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படும்.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பஞ்சர் கடை திறக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ‌ ஏராளமானோர் வாகனங்களில் வருவார்கள்.

அவர்கள் வாகனங்களில் வரும் போது திடீரென வாகனங்களில் பழுது ஏற்பட்டாலோ அல்லது பஞ்சர் ஏற்பட்டாலோ அதனை சரி செய்யும் விதமாக பஞ்சர் கடை திறக்கப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முன்னதாக பாதுகாப்பு கருதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு இருசக்கர வாகனங்களில் யாரும் வரவேண்டாம் என்று விஜய் கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.