
பஞ்சாப் ஹரியானா நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இழப்பீடு வழங்க அவரது வயதை ஆதார் அட்டையை வைத்து உறுதி செய்யலாம் என்று கூறியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாமே தவிர வயதை உறுதி செய்யும் சான்றிதழாக பயன்படுத்த முடியாது என்பதை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளியில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ் தான் ஒருவரது வயதை உறுதி செய்ய அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவரின் வயது ஆதார் அட்டையின் படி 47-ஆகவும் பள்ளியில் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழின்படி 45-ஆகவும் இருந்துள்ளது. அவர் 45 வயதில் இறந்ததாக தான் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வயது சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் இங்கு பதிவு செய்துள்ளது.