இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதாவது ஆண்ட்ராய்டு போன் பெரும்பாலானவர் பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பிறகு சிறிய பரிவர்த்தனைகள் முதல் பெரிய பரிவர்த்தனைகள் வரை ஆன்லைனில் பணப்பரிமாற்றம் எளிதாக இருக்கிறது. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகமாக இருக்கிறது. இது எளிதாக இருப்பதால் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் மேம்பட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட யுபிஐ-லிருந்து யுபிஐ வாலட்டுக்கு மாறுவது மேம்பட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது பரிவர்த்தனைகள் தோல்வியடைவதை தடுப்பதோடு, கேஷ்பேக் பெறுவதற்கும் சிறந்த வழி என்று கூறப்படுகிறது. பொதுவாக யுபிஐ என்பது உங்கள் வங்கி கணக்குடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் யுபிஐ வாலட்டில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட ‌ பணத்தை தான் பயன்படுத்துவோம். மேலும் இதன் காரணமாக யுபிஐயில் நேரடியாக பணம் செலுத்துவதை விட சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட யுபிஐ வாலட் மூலம் பணம் அனுப்புவது மேல் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.