
சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி வீரக்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி(20) என்ற மகளும், சிவஸ்ரீ(10) என்ற மகனும் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெயிண்டர் முனுசாமியின் மகள் ஜீவ தர்ஷினி(14) வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி, சிவஸ்ரீ, ஜீவதர்ஷினி ஆகிய மூன்று பேரும் இன்று காலை துணி துவைப்பதற்காக கொத்திக்கொட்டை ஏரிக்கு சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பல மணி நேரம் போராடி மூன்று பேரில் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.