திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது நீரில் தலை இல்லாத பெண்ணின் உடல் மிதந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி சத்தம் போட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தலை இல்லாததால் அது யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் உயிரிழந்த பெண்ணின் காலில் ஒரு கொலுசு மட்டும் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அந்த பெண்ணை யாராவது கொலை செய்தார்களா? அல்லது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா என்பது தெரிய வரும். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.