மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முன்னாள் தொழில் அதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஆழ்ந்த இரங்கல்கள் வெளிப்பட்டன. அவருடைய மறைவுக்கு அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தில், அவரது வளர்ப்பு நாய் ‘கோவா’ உடன் இருந்தது. கோவா, நாயின் எஜமானரின் இறுதி நேரத்தில் அவரை விட்டு நகராமல் நின்று, ஆழ்ந்த துக்கத்தில் நின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின. அந்த வீடியோ காட்சிகள் பலரின் மனங்களையும் தொட்டன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரத்தன் டாடாவின் நாய் கோவா, அவரது மறைவிற்கு 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி தீயாய் பரவியது. “மனிதர்களைவிட நாய்கள் எஜமானர்களிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள்” என்ற கருத்து செய்தியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. அதாவது காவல் ஆய்வாளர் சுதிர் ரத்தன் டாடாவின் நாய் உயிர் இழந்து விட்டதாக பரவும் செய்திகள் போலியானவும் இது போன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரத்தன் டாடா இறுதி சடங்கின் போது அவருடைய வளர்ப்பு நாய் அருகே இருந்த காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் உருக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sudhir Kudalkar (@sudhirkudalkar)