தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அரசு அதோட பொதுத்துறை அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வணிக வளாகங்கள் மற்றும் அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இன்று தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.