கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா கன்னடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதால் விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்திற்கு முடங்கின.

இதனை தொடர்ந்து கனடா-இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் இந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. இதில் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடியும் ஜஸ்டினும் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் பேசியதாக ஜஸ்டின் தெரிவித்தார். ஆனால் அவர் அப்படி எதுவும் மோடியிடம் பேசவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை சேகரித்துள்ளதாக கனட சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது நிலைமையை இன்னும் மோசம் அடைய வைத்துள்ளது. அதாவது கன்னட நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஜஸ்டின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஜஸ்டின் இந்தியாவின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது எனவும், கனடிய மண்ணில் கனோடியர்களுக்கு எதிரான கொலை வன்முறை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களை ஆதரித்து இந்திய அரசு மிகப்பெரிய தகவலை செய்து விட்டது எனவும், இந்த குற்றங்களுக்கு இந்திய அரசு உடந்தையாக இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது எனவும் பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான ஆதாரங்களை இந்திய வெளியுறவு அதிகாரிகளை எங்கள் நாட்டின் தூதர்கள் 6 பேரும் நேரில் சந்தித்து வழங்கினர். ஆனாலும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக பிரிட்டன் பிரதமரிடம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் கனட அரசு தெரிவித்திருக்கிறது.