பஞ்சாப் மாநிலமாக மாகாளி பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசங்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த காணொளியில் டியூசன் முடிந்து சக சிறுவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் ஒருவரது வளர்ப்பு நாய் குறைப்பதை பார்த்து அதே போன்று தானும் குறைத்துள்ளான்.

இதனால் கோபம் அடைந்த நாயின் உரிமையாளர் சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் சிறுவனை கீழே தள்ளி அவனது நெஞ்சில் காலை வைத்து மிதித்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.