தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி தற்போது மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது பட குழுவினர் ட்ரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ ரசிகர்களைக் அவரது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
