ஹங்கேரியில் 45 ஆவது செஸ் ஒலிபியர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. அதன்படி ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜுன் வெற்றி பெற்றதால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியானது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்திய மகளிர் அணையும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அதன்படி இறுதி சுற்றில் அர்பைஜான் அணியை வீழ்த்தி ‌3.0-0.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும் இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் அணி வெற்றியை உறுதி செய்து தங்க பதக்கம் என்று அசத்தியுள்ளது.