மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பழங்குடி பெண், சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டபடி செல்லும் வீடியோ வெளியாகி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலத்தில் கிராமப்புற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்த பெண் தனது கிராமத்தின் சாலைகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை உணர்த்தும் விதமாகவே இவ்வாறு செய்துள்ளார். பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சேறு நிறைந்த சாலையில் அவர் படுத்து கும்பிட்டு சென்றது அவரது கிராம மக்களுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதியை கடந்து சென்றவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து அந்த பெண் கூறும்போது, “சாலைகளை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த முறையை நாடினேன். கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையை மக்களுக்கு உணர்த்துவதற்கான எனது கடைசி முயற்சி இது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.